undefined

மீண்டும் சிபிஐ வளையத்தில் விஜய்... இன்று டெல்லியில் 2வது கட்ட விசாரணை!

 

இன்று கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம் 2ம் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்துகின்றனர். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். 

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கைச் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. முதல்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்குச் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.

இன்று காலை 11 மணிக்கு டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்பதால், நேற்று  மாலையே நடிகர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். முதல் விசாரணையில் அவர் அளித்த பதில்களைத் தவெக நிர்வாகிகளின் வாக்குமூலங்களுடன் ஒப்பிட்டு, கூடுதல் விபரங்களைப் பெறச் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!