விஜய் தான் தமிழக முதல்வர்... மெக்காவில் பெண்கள் சிறப்பு வழிபாடு.. வைரலாகும் வீடியோ!
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் சிலர், நடிகர் விஜய் தலைமையில் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) அரசு அமைவதற்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்த வீடியோ, இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் புதிதாகத் துவங்கப்பட்ட நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகமும்' (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் அதன் களப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
பிரார்த்தனையில் ஈடுபட்ட இந்தப் பெண்கள், திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.புனிதத் தலத்திலிருந்து தங்கள் ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதாகவும் அவர்கள் கூறிய அந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக, புனிதத் தலத்திலிருந்து ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்தது, தமிழக அரசியலில் விஜய்யின் செல்வாக்கு எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவி உள்ளது என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!