undefined

சிக்கலில் ஜனநாயகன்...  … நீதிமன்றத்தில் அனல் பறந்த விசாரணை! 

 

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸா தலைமையிலான அமர்வில் காலை 11.30 மணியளவில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.

விசாரணையின் போது, மண்டல அலுவலர் படம் பார்த்தாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் பார்க்கவில்லை என்றும், குழுவே படத்தை பார்த்ததாகவும் சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. படத்தில் 14 காட்சிகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகளை நீக்கிய பிறகு சான்றிதழ் வழங்க கோரியதாக தயாரிப்பு தரப்பு வாதிட்டது.

மேலும், புகார் வந்ததால் மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டதாக சென்சார் போர்டு தெரிவித்தது. 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படங்களுக்கு தணிக்கை வாரியத் தலைவர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. படம் வெளியிட 500 கோடி முதலீடு செய்துள்ளோம் என்பதால் உடனடி நிவாரணம் கேட்க முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ வெளியீடு தொடர்பான முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!