undefined

 விஜய் மக்கள் சந்திப்பு... குழந்தைகளுடன் வந்த பெண்களுக்கு அனுமதி மறுப்பு! 

 
 

கரூர் சம்பவத்திற்குப் பின் இடைநிறுத்தப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் மீண்டும் தொடங்கியது. ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த உள்ளரங்கு கூட்டத்திற்காக 2,000 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 1,000 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி நுழைவுவாயிலில் தன்னார்வலர்கள் QR குறியீடு சீட்டுகளைச் சோதித்து அனுமதி வழங்கி வருகின்றனர்.

ஆனால் நிகழ்ச்சி துவங்குவதற்குமுன் நுழைவாயிலில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. நுழைவுச்சீட்டு பெற்ற பல பெண்கள் தங்களுடைய சிறு குழந்தைகளுடன் வந்த நிலையில், குழந்தைகளுடன் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில பெண்கள் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நுழைவு சீட்டு விதிமுறைகளின் படி QR குறியீடு வைத்துள்ளவர்களே உள்ளே அனுமதிக்கப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் சந்திப்பு நடைபெறும் நிலையில், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க எடுத்த முடிவாக இதை தன்னார்வலர்கள் விளக்குகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!