விஜய் ரோடு ஷோ... அலைமோதிய மக்கள் கூட்டத்தில் வெயிலில் மயங்கி விழுந்த பெண்.!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்.10) காரைக்குடியில் தனது அதிரடி ரோடு ஷோவை மேற்கொண்டார். தனது அபிமான தலைவரைக் காணக் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்றதால் காரைக்குடியே மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இந்தச் சூழலில், கூட்ட நெரிசலிலும் கொளுத்தும் வெயிலிலும் விஜய்க்காகக் காத்திருந்த பிரியா என்ற பெண், திடீரென நிலைகுலைந்து மயங்கி விழுந்த சம்பவம் அங்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கி விஜய் கார் மூலமாக வந்து கொண்டிருந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து பைக்கில் அதிவேகமாக வந்த உற்சாகத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாகப் பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடி உடைந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது தொண்டர்கள் விபத்தில் சிக்கியதும், பெண் ஒருவர் மயங்கியதும் தவெக வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எதையும் பொருட்படுத்தாமல் தனது ரோடு ஷோவைத் தொடர்ந்த விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்களுக்குக் கையசைத்து உற்சாகப்படுத்தினார். தலைவரைக் காணும் ஆவலில் விபத்துகளையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முண்டியடிப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!