undefined

 விஜய்யின் மகன் இயக்கத்தில் ‘சிக்மா’… படப்பிடிப்பு முடிந்து டீசர் தேதி அறிவிப்பு!

 
 

  

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் ‘சிக்மா’வின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பூஜை மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.

‘சிக்மா’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் டீசர் டிசம்பர் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் சஞ்சயின் இயக்க அறிமுகம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!