ஆட்சியாளர்களின் அலட்சியமே மழை நீர் தேங்க காரணம்... விஜய் கடும் விமர்சனம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இது குறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம்.
நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை “மக்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால், கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. இது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார். மீதமுள்ள பருவமழைக் காலத்திற்குள் குறைந்தபட்சம் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், மழைநீர் விரைவாக வெளியேறும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!