விஜய் மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக  சிபிஐ  சம்மன்!  

 

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.நிகழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலர் மிதிபட்டு உயிரிழந்ததுடன், பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பதைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வழக்கு விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதால் மார்ச் 10 அன்று ஆஜராக முடியாது என்று தெரிவித்து மாற்று தேதி வழங்குமாறு விஜய் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டிருந்தாலும் டெல்லியிலேயே ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!