பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட தவெக தீர்மானம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நடைபெற்ற பெரம்பூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்தார். இதனைத் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிமொழிந்து, தொண்டர்களின் இந்த விருப்பம் தலைவரிடம் கொண்டு செல்லப்படும் என அறிவித்தார். "வளர்ச்சி குறைவாக உள்ள, வறுமை மிகுந்த தொகுதியில்தான் தான் போட்டியிட விரும்புவதாக விஜய் ஏற்கெனவே கூறியிருந்தார். அந்த வகையில் வடசென்னையின் பெரம்பூர், கொளத்தூர் அல்லது ஆர்.கே.நகர் தொகுதிகள் அவரது தேர்வாக இருக்கும்" என ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பேசினார்.
"சென்னையைத் தங்களின் கோட்டை எனக் கூறிக்கொள்ளும் திமுக-வுக்குச் சவால் விடும் வகையில், தவெக தனது தேர்தல் பயணத்தை இங்கிருந்தே தொடங்குகிறது. இனி சென்னை தவெக-வின் கோட்டை" என ஆதவ் அர்ஜுனா அதிரடியாகக் குறிப்பிட்டார்.
விஜய் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. வடசென்னை அல்லது மத்திய சென்னையின் ஒரு தொகுதியிலும், தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மையப்பகுதியான திருச்சியில் திருச்சி (திருச்சி கிழக்கு/மேற்கு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல். இருப்பினும், இது குறித்த இறுதி முடிவைத் தவெக தலைவர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்தத் தேர்தல் வியூகம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!