சட்டமன்ற தேர்தலுக்கு பின் விஜய் த்ரிஷா திருமணம்...? வைரலாகும் பதிவு!
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை இணைத்துச் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் தற்போது மீண்டும் காட்டுத்தீயாய் பரவத் தொடங்கியுள்ளன. சில காலம் அமைதியாக இருந்த இந்த விவகாரம், தற்போது ஒரு சிறிய ஆன்லைன் நிகழ்வு மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இதற்குக் காரணமாக அமைந்தது நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் செய்த ஒரு 'லைக்' தான் என்று கூறப்படுகிறது.
சமூக வலைதளப் பதிவு ஒன்றில், "2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா ஆகியோரின் திருமணம் நடைபெறலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவிற்குத் திரிஷாவின் தாயார் லைக் செய்ததாகத் தகவல் பரவியதுதான் இந்த விவாதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. ரசிகர்கள் இதனை ஒரு மறைமுகச் சிக்னலாகவே கருதித் தங்களது யூகங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரித் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
தனது அரசியல் பயணமான 'தமிழக வெற்றிக் கழகம்' பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், அவரைச் சுற்றி இத்தகைய தனிப்பட்ட செய்திகள் வெளியாவது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் திருமண வதந்திகள் குறித்தோ அல்லது விவாகரத்து வழக்கு குறித்தோ விஜய் தரப்பிலிருந்தோ அல்லது திரிஷா தரப்பிலிருந்தோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தியா அல்லது இதில் உண்மை ஏதும் உள்ளதா என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!