undefined

 “திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தவெக”... 3ஆம் ஆண்டு விழாவில் விஜய் ஆவேசம்! 

 
 

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கட்சி காலடி வைத்துள்ள நிலையில், விழாவில் உரையாற்றிய தலைவர் விஜய், “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். தொண்டர்களின் அர்ப்பணிப்பும், மக்களின் நம்பிக்கையும் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது மூன்று பெரிய அணிகள் மட்டுமே உள்ளதாக விஜய் கூறினார். தவெக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, பாஜக தலைமையில் ஒரு அணி என அவர் பட்டியலிட்டார். “திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டுமே முடியும்” என்று திட்டவட்டமாக கூறிய அவர், அதிமுக தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த விஜய், திருவள்ளுவரின் பெயரை எடுத்துக் கொண்டு, “அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று வித்தியாசமான திருக்குறள் வடிவில் சாடினார். ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதாகவும், தேர்தலில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விஜய் வாக்களிப்பார் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்த விழா தவெகவின் அரசியல் பயணத்திற்கு புதிய வேகத்தை அளித்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!