நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு… “புலி” பட சம்பள விவகாரம்…!
நடிகர் விஜய் நடித்த “புலி” படத்துக்கான சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டில் வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது “புலி” படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருமானத்தை மறைத்ததாக கூறி ரூ.1.5 கோடி அபராதம் விதித்து 2022 ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
பின்னர் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!