undefined

விஜய் ஒரு ‘துரோகி’ ... திமுகவில் இணைந்த  பி.டி. செல்வகுமார் பரபரப்பு !  

 

திமுகவில் சமீபத்தில் இணைந்துள்ள விஜய்யின் முன்னாள் மேலாளரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பி.டி.செல்வகுமார், தவெக தலைவர் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய் ஒரு துரோகி” என வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய அவர், செங்கோட்டையனையும் ஊழல்வாதி என சாடினார். இளைஞர்கள் விஜயை நம்பி பணம் செலவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தேர்தலில் தோல்வியடைந்தால் விஜய் வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், விஜய்க்கு தோல்வி பிடிக்காது என கூறினார். தோல்வியடைந்த படத்தின் தயாரிப்பாளர் சந்திக்க வந்தாலும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார் என்றும் குற்றம்சாட்டினார். “நான் இல்லை என்று சொல்லுங்கள்” எனத் தவிர்த்து விடுவார் எனவும் விமர்சித்தார். வெளியில் அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், நிஜத்தில் எந்த செயல்பாடும் இருக்காது என தாக்குதல் மேற்கொண்டார்.

முன்னாள் மேலாளரே இவ்வாறு பேசுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகளை குறிவைத்து கூறிய கருத்துகள் கட்சியின் உள் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெக தரப்பில் இருந்து இதுவரை பதில் வராதது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!