undefined

விஜய் சொன்ன குட்டிக்கதை... வேலூரில் தொண்டர்கள் உற்சாகம்! 

 

 

வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் தலைவர்  விஜய் உரை நிகழ்த்தினார்.   அப்போது அவர் ஒரு குட்டிக்கதை கூறி அரசியல் நிலையை விளக்கினார். “நான்கு வழிச் சந்திப்பில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்றது. யாராலும் அடக்க முடியவில்லை” எனக் கதையை தொடங்கினார்.

“அனுபவம் உண்டு என்று சென்றவர்கள் எல்லாம் காளையால் தூக்கி எறியப்பட்டனர். ஆனால் ஒரு சின்ன பையன் அமைதியாக அருகே சென்று புல்லைக் கொடுத்தான். பசியால் தவித்த காளை அதைச் சாப்பிட்டு அமைதியானது. கோபம் இல்லை, பசி தான் இருந்தது என அந்த பையன் சொன்னான்” எனக் கூறினார். சூழ்நிலைக்கு ஏற்ற முடிவு எடுத்தாலே பிரச்சனை தீரும் என அந்தக் கதையின் கருத்தை எடுத்துரைத்தார்.

“இந்தக் கதையில் முரட்டு காளை அரசியல் களம். பெரியவர் மக்கள். சின்ன பையன் நானும் தவெகவும்” என்று விளக்கம் அளித்தார். “நல்ல தலைமை இல்லாததால் மக்கள் ஏமாந்தனர். அந்த நேரத்தில் வெகுஜன இயக்கமாக வந்ததே தவெக” என்று விஜய் தெரிவித்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!