நல்லகண்ணு மறைவு… தவெக தலைவர் விஜய் உருக்கமான இரங்கல்!
Feb 25, 2026, 16:04 IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு மன வேதனையை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைக்காக வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த போராளியுமாக இருந்தவர் நல்லகண்ணு என அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்த விஜய், நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!