undefined

 விவாகரத்து விவகாரம்… தவெக தலைவர் விஜய்க்கு மாதர் சங்கம் கடும் கண்டனம்!

 

நடிகர் விஜய் மனைவி சங்கீதா மீது சமூக வலைதளங்களில் இடம்பெறும் தாக்குதல்களை கண்டிக்காததைத் தொடர்ந்து மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்கு ஒரு சட்ட நடைமுறை எனவும், அதை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆபாசமாக விவாதிப்பது தவறு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை தனிப்பட்ட விஷயமாகக் கருதி மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. யாருக்கும் இதை அவதூறாக பேசும் உரிமை இல்லை என்றும் மாதர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக பெண்களை குறிவைத்து செய்யப்படும் பதிவுகள் சமூக நெறிமுறைக்கு எதிரானவை எனவும் தெரிவித்துள்ளது.

த.வெ.க.வினரின் பதிவுகள் கருத்துச் சுதந்திரம் அல்ல என்றும், அது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் மாதர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பெண்களின் மரியாதையை காக்க சமூக பொறுப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!