விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட விஜய்… பையில்  இருந்த ஆயுதத்தால் பரபரப்பு!

 

கரூர் பலி சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லி செல்ல தவெக தலைவர் விஜய் இன்று சனிக்கிழமை தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தபோது, அவரது பையில் கத்தரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சில நேரம் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் தாமதமான பின்னர் விஜய் தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் சிலரும் பயணம் செய்துள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை தில்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ள விஜய்யை, மீண்டும் மார்ச் 15 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய புலனாய்வு அமைப்பு அழைப்பாணை அனுப்பியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!