விஜய் தான் அடுத்த முதல்வர்...  செங்கோட்டையன் அதிரடி! 

 

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறவில்லை என்று அவர் மிகத் தெளிவாகப் பதிலளித்தார். பாஜக கூட்டணியில் விஜய்க்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக உலவும் தகவல்களை மறுத்த அவர், உயரிய நிலையில் இருந்து மக்கள் பணியாற்ற வந்துள்ள விஜய்யைத் தமிழக மக்கள் முதலமைச்சராகத் தான் பார்க்க விரும்புகிறார்கள் என்றும், அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். பவன் கல்யாண் விஜய்யுடன் பேசியதாக வரும் செய்திகள் தனக்கு எட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய் திடீரென டெல்லி சென்றது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன், சிபிஐ அழுத்தம் காரணமாக அவர் டெல்லி சென்றாரா என்பது பற்றி நேரடியாகக் குறிப்பிடாமல், அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டார், அங்கு சென்று அதற்கான முறையான பதில்களை அளித்துள்ளார் என்று தெரிவித்தார். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றத்தை உருவாக்கும் திறன் விஜய்க்கு மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாம்களின் போது மக்கள் காட்டிய ஆர்வம், மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மக்கள் விஜய்யின் நல்லாட்சியை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதே அந்த எழுச்சிக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த செங்கோட்டையன், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தொழில் அதிபர்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்புவார் என்றும் அவர் கூறினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கள ஆய்வுகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன என்றும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தகுதியான மற்றும் சிறந்த வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்