காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்... மின்கம்பங்களில் தகர ஷீட் அடித்து பேருந்து நிலையம் மூடல்... பயணிகள் கடும் அவதி!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதைக் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருவதால் அந்தப் பகுதியே மக்கள் கடலாகக் காட்சியளிப்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் விஜய் பங்கேற்ற நிகழ்வுகளின் போது தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆபத்தான முறையில் மரங்கள் மற்றும் மின் கம்பங்களில் ஏறி உயிருக்கு ஆபத்தை விளைவித்தனர். இதனைத் தடுக்கும் பொருட்டு இம்முறை மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களைச் சுற்றிக் கூர்மையான தகர ஷீட்கள் அடிக்கப்பட்டு யாரும் ஏற முடியாதபடி போலீசார் பலத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் ஒலிபெருக்கிக் குழாய்கள் கட்டப்பட்டுள்ள இடங்களிலும் இதுபோன்ற தடுப்புகள் அமைக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காகக் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொளுத்தும் கடும் வெயிலுக்கு மத்தியில் கையில் பைகளுடன் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து பழைய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தாலும் மறுபுறம் போக்குவரத்து மாற்றத்தால் சாதாரண பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவது காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!