செம மாஸ்!! மைனஸ் 12 டிகிரியில் 500 பேருடன் இளையதளபதி சண்டை!!  லியோவின் அடுத்த அப்டேட்!!  

 

லியோ படத்தின் படப்பிடிப்பின் போது காஷ்மீரில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து மிஸ்கின் நெகிழ்ச்சி அப்டேட் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மிஷ்கின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்.... minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள்.

Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான், என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின், என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் லலித் கூட்டணி லியோ படத்திற்காக இரண்டாவது முறையாக சேர்ந்துள்ளது. லியோ படத்திற்கும் அனிருத் இசையமைக்க, இயக்குனர் ரத்னகுமர் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார். சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி மாஸ்டர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.லியோ படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சிக்காக, காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?