undefined

விஜய் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு... ரசிகர் மாரடைப்பால் மரணம்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சேலம் சென்றுள்ளார்.சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்றிருந்த சூரஜ் (37) என்ற நபர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளிப் பட்டறைத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்த சூரஜிற்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். அவரது இந்தத் திடீர் மறைவு அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் தரப்பிலிருந்து அவரது குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த சேலம் கூட்டத்திற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன: 4,998 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். க்யூஆர் கோடு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், "மற்ற கட்சிகளுக்கு உடனே அனுமதி வழங்கும் அரசு, தவெக-விற்கு மட்டும் நிபந்தனைகளை விதிப்பதாக" முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்துப் பேசினார். "ஸ்டாலின் சார் ஆபரேட்டிங் ப்ரொசீஜர்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!