undefined

விஜய் ரோடு ஷோ ரத்து: டிச.9ல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி த.வெ.க. மனு!

 

புதுச்சேரியில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ரோடு ஷோ (Road Show) நடத்துவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடாகப் பொதுக்கூட்டம் நடத்தக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் டிஜிபியிடம் ரோடு ஷோ நடத்தக் கோரி நான்கு முறை மனு அளித்தும் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, கிறிஸ்துமஸ் விழாவுக்குள் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும், அதற்கான இடத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று நடக்கவிருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டு, வரும் டிசம்பர் 9-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்தனர்.

உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் (எக்ஸ்போ) பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டு நேற்று காவல்துறை சீனியர் எஸ்.பி. கலைவாணனிடம் கடிதம் அளித்தனர். ஆய்வு: மனு கிடைத்ததையடுத்து, போலீஸ் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேடை அமைப்பு, வி.ஐ.பி.க்கள் வரும் வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!