undefined

 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கம்... அரசாணை வெளியீடு! 

 
 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முன்பு இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, புதியதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை 35-இல் இருந்து 95-ஆக உயர்ந்துள்ளது. 9 கிராம ஊராட்சிகள் மட்டும் இந்நிலையில் மறுசீரமைப்பில் சேர்க்கப்படவில்லை. விரைவில் அவற்றின் நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!