undefined

ஓய்வை  மாற்றி அறிவித்த  வினேஷ் போகத்...  ரசிகர்கள் உற்சாகம்! 

 
 

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அவர் தன் ஓய்வு முடிவை மாற்றிவிட்டு, மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்புகிறார். பாரீஸ் ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது அவருக்குப் பெரிய மன வேதனையை அளித்தது.

போட்டி முடிவுக்குப் பிறகு மல்யுத்த விளையாட்டிலிருந்தே அவர் ஓய்வு பெற்றார். எனினும், ஹரியானா முதல்வர் அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதையைக் கொடுத்துக் கவுரவித்தார். அதன் பிறகு வினேஷ் போகத் காங்கிரஸில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனார். அவர் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத் மீண்டும் களம் திரும்பவிருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். "பாரீஸ் ஒலிம்பிக்கோடு முடிந்துவிட்டதா என்று பலர் கேட்டனர். நீண்ட நாட்களாகப் பதில் தெரியவில்லை. மன அழுத்தம், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டி இருந்தது" என்று அவர் கூறினார். "இப்போதும் நான் மல்யுத்தத்தை நேசிக்கிறேன். மீண்டும் போட்டியிட விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"என்னுள்ளே இருக்கும் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. என் பயணத்தின் ஒரு பாதி களத்திலேயே தான் இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி நான் பயமின்றி முன்னேறுகிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லவில்லை. என் மகனும் என் அணியில் சியர் லீடராக இணைந்துள்ளான்" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!