தொடரும் வன்முறை... வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்தே கொலை!
அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீஸ் களம் இறக்கப்பட்டதில் நிலைமை தீவிரமடைந்து 1,581 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்று, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது. மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய நண்பரும் சுடப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நிலையில், பதிலடியாக இந்து வாலிபர் திபு சந்திரதாஸ் எரித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
டாக்கா நகரில் உள்ள தேவாலயம் அருகே கிறிஸ்துமஸ் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சியாம் என்ற வாலிபர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். இதே சூழலில் ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்து இளைஞர் அம்ரித் மண்டல் தாக்குதலில் உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் பிடிபட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர் சம்பவங்களால் வங்காளதேசம் முழுவதும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!