undefined

வங்காளதேசத்தில் மீண்டும் கொடூரம்...இந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - பதற்றம் அதிகரிப்பு!

 

வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், அங்குள்ள சிறுபான்மையின இந்துக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மருந்து கடை நடத்தி வரும் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

வங்காளதேசத்தின் ஷரிதாப்பூர் மாகாணம், தமுத்யா பகுதியைச் சேர்ந்தவர் கோகோன் சந்திர தாஸ் (50). இவர் கீர்பாங்கா பஜாரில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. முதலில் கத்தியால் குத்தியும், பலமாகத் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்ட அந்த கும்பல், பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடியது.

உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட கோகோன் சந்திர தாஸ், தற்போது டாக்கா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

சமீபத்தில் திபு சந்திர தாஸ் மற்றும் அம்ரித் மொண்டல் ஆகிய இரண்டு இந்துக்கள் வன்முறையில் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் மத ரீதியானவை அல்ல, தனிப்பட்ட முன்விரோதம் எனக் கூறி இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் மழுப்பி வருகிறார். ஷெரீப் உஸ்மான் ஹாடியைக் கொன்றவர்கள் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக வங்காளதேச அரசு கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தற்போது குற்றவாளி பைசல் கரீம் மசூத் துபாயில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், வங்காளதேசத்தில் பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!