undefined

வைரல் வீடியோ!! தினசரி சரக்கடிக்கும் ஆடு!! எங்க போய் முடிய போகுதோ?!

 

முன்பெல்லாம் கடும் உழைப்பாளிகள் அதாவது மூட்டை தூக்குபவர்கள்,  துப்புரவு தொழிலாளர்கள் என குறிப்பிட்ட வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தினமும் மது குடிப்பார்கள். இப்போதெல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தை போல் சோஷியல் டிரிங்கிங்க் அதிகரித்து வருகிறது. தினசரி இரவு சிறிது சரக்கு அடித்து தூங்க செல்லும் வழக்கம்  தான் பொதுவாக பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தான் தினமும் குடிப்பது மட்டுமின்றி தான் வளர்த்து வரும் ஆட்டுக்கும் ஒரு பெக் ஊற்றி கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளார் விவசாயி ஒருவர். தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மொடுகுண்டா பகுதியில் வசித்து வருபவர்  ரவீந்தர் ரெட்டி.

<a href=https://youtube.com/embed/0HkWZb8L4a0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/0HkWZb8L4a0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Goat Drinking Alcohol & Eating Chips at Yadradri Bhuvanagiri | Dhoom Dhaam Muchata | T News" width="800">

விவசாயத் தொழில் செய்து வரும் இவர், தனது விவசாய நிலத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த அவருடைய வளர்ப்பு ஆடு ஒன்றுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்தார். மதுவை குடித்த அந்த ஆடு எப்போதெல்லாம் ரவீந்திர ரெட்டி மது குடித்தாலும் அவர் அருகில் வந்து நிற்பதை வழக்கப்படுத்தி கொண்டது. ரவீந்திர ரெட்டியும் அந்த ஆட்டுக்கு தொடர்ந்து மது வாங்கிக் கொடுக்கிறார். தினமும் அந்த ஆடு மதுவை குடித்து தள்ளாடி வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரவீந்தர் ரெட்டி தான் மது அருந்தும் போதெல்லாம் தான் வளர்க்கும் ஆட்டிற்கும் மது ஊற்றிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம்,

அந்த மதுவைக் குடித்துப் பழகிய ஆடு, தற்போது மதுவுக்கு அடிமையாகி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீ வெளங்காம போறதில்லாம வாயில்லா ஜீவனை ஏன் வதைக்கிற? என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தினம் சரக்கு கிடைக்குதே பேசாம நான் அந்த ஆடா பொறந்திருக்க கூடாதா எனவும் கலாய்த்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!