வைரல் வீடியோ!! திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்!!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என நம்பியது அந்த காலம் . சொர்க்கத்தையே திரும்பி பார்க்கிற வகையில் ஆடம்பரமாக வித்தியாசமான திருமணங்களை நடத்துவது இந்தக் காலம். மணப்பெண் ஆடிக்கொண்டே மேடைக்கு வருவது, மணமகன் பறந்து வருவது, ஹெலிகாப்டரில் திருமணம், கடலுக்கடியில் திருமணம், பறந்து கொண்டே திருமணம், ரிசார்ட்டுகளில் திருமணம், செட் போட்டு திருமணம் என திருமணம் செய்து கொள்வதில் பல பல வித்தியாசங்கள்.
ரக்னி என்ற அந்த மணப்பெண் திருமணம் முடிந்த கையோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் 4 முறை சுட்ட சம்பவம் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மணமகளுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளையோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நடக்கிறதென புரியாமல் பீதியில் அமர்ந்திருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் ரக்னி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் ரக்னி தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!