பெயிண்ட் அடித்த தோனி... வைரலாகும் வீடியோ! ‘தல’ களமிறங்கிடுச்சு!
16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதில் களம் காண இருக்கும் வீரர்கள் கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு எம் எஸ் தோனி மஞ்சள் பெயிண்ட் அடித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் இது நல்லாவே வேலை செய்யுது. இதனால் அடுத்த சேருக்கும் நான் பெயிண்ட் அடிக்கிறேன் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கிச் செல்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகள்.
ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 7:30 மணி
ஏப்ரல் 12 – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 7:30 மணி
ஏப்ரல் 21 – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இரவு 7:30 மணி
ஏப்ரல் 30 – சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், பிற்பகல் 3:30 மணி
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!