வைரல் வீடியோ!! உள்ளாடையுடன் நைட் கிளப்பில் இளம் பெண் ரகளை !!
வார நாட்களில் முழுவதும் பணி. வார விடுதிகளில் நைட் கிளப்புக்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தான் இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கை நகர்கிறது. அவர்களின் ஒரு வார மன அழுத்தத்தை போக்கவும், அடுத்து ஒரு வாரம் புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்கவும் இது அவசியம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவின் பல பகுதிகளில் பெருகி வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த கேளிக்கை விடுதிகள் இப்போது பல்கி பெருக தொடங்கி விட்டன. குறிப்பிட்ட மகளிரை தவிர முன்பெல்லாம் ஆண்கள் கூட்டம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நைட் கிளப்புக்களை பொறுத்தவரை ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இளம்பெண்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.
நாக்பூர் வார்தா சாலையில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்குள் நுழைய முன் அனுமதி பெற வேண்டும். நேரம் தாண்டி வருபவர்கள் , முன் பதிவு செய்யாதவர்கள், புதிதாக வருபவர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேரம் தாண்டிவந்தார். கிளப்புக்குள் வருவதற்கான நேரம் முடிந்திருந்ததால் புதிய உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை என பாதுகாப்பு பணியில் இருந்தவர் தெரிவித்தார்.
அந்த பெண்ணிற்கு எத்தனை சொல்லியும் கேட்காததால் இது குறித்து கிளப் உரிமையாளர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் அந்த பெண் காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.போலீசார் துரத்தியதும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த பெண் செய்த ரகளையை அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!