வைரல் வீடியோ... 5 ரபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டன... நேரலையில் திணறிய அமைச்சர்!
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில் அந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்த உரையில் ஷேபாஸ் ஷெரிப் பாகிஸ்தானில் இரவு நேரத்தை பயன்படுத்தி இந்தியா கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. அந்தத் தாக்குதலில் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தினர். அவற்றில் 3 ரஃபேல் விமானங்கள் உட்பட 5 ஜெட் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. மேலும் 2 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!