வைரல் வீடியோ.. 11ம் வகுப்பு மாணவி சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயற்சி... டிசி கொடுத்த பள்ளி நிர்வாகம் !
May 2, 2025, 18:40 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூரில் வசித்து வருபவர் 11ம் வகுப்பு மாணவி. இவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப் பார்த்து, அதை அகற்ற முயற்சித்தார்.
அந்த வழியாக சென்றவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து “கிராந்தி சேனா” உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் பள்ளியைச் சுற்றி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தின. அவர்களது அழுத்தத்தினால், பள்ளி நிர்வாகம் மாணவியை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!