வைரல் வீடியோ... சினிமாவை பார்த்து நள்ளிரவில் மொபைல் டார்ச்சில் தங்கம் தேடும் மக்கள் !
பிரபல நடிகரான விக்கி கவுசலின் சாவா திரைப்படம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் மராத்தியர்கள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் புதையலை முகலாயர்கள் மத்திய பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிகார் கோட்டையில் வைத்ததாக காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் அந்த கோட்டையில் தங்க நாணயங்கள் அடங்கிய புதையல்கள் இருப்பதாக வதந்தி பரவியது.
அந்த பகுதியில் தங்க நாணயங்கள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் தொல்லியல் சிறப்பு மிக்கவை. இந்த புதையல்கள் அரசுக்கு தான் சொந்தம் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையை சுற்றி மக்கள் குழி தோண்டி தங்க நாணயங்களை தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!