undefined

வைரல் வீடியோ... ஏடிஎம்மில் குவிந்த மக்கள்... ரூ.500 போட்டா ரூ.1100 பணம்!

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தின் நாக்லா புத்தா பகுதியில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகரூ500 எடுக்க வந்தவர்களுக்கு ரூ1100 கொடுத்துள்ளது.  தொடக்கத்தில் சிலரை மட்டுமே புரிந்த இந்த தவறான பணவெளியீடு தகவல், விரைவில் அடுத்தடுத்து  பரவியதால்  ஏடிஎம் முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும்   காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, ஏடிஎத்தை முடக்கினர். பின்னர் ஒரு இளைஞரிடம் நேரில் பணம் எடுக்கச் செய்து, தவறான வெளியீட்டை உறுதிப்படுத்தி கொண்டனர். இது முற்றிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.  தற்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்த  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில்  பரவி வைரலாகி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது