வைரல் வீடியோ... பேருந்தை நிறுத்திவிட்டு சாலையோரத்தில்  தொழுகை செய்யத் தொடங்கிய  ஓட்டுனர்... பயணிகள் கடும் அவதி!  

 
கர்நாடக மாநிலத்தில் ஹூபள்ளி – ஹவேரி மாக்சு அருகே ஜாவேரி பகுதியில், மாநில போக்குவரத்துக் கழக ஓட்டுநர்  வழக்கம் போல் பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அவர் திடீரென பேருந்தை  சாலையோரத்தில் நிறுத்தி நமாஸ் தொழுகையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்தில் இருந்த குழந்தைகள் அழத் தொடங்கின. அவசரமாக செல்ல பேருந்தில் ஏறியவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.  

இந்நிலையில் அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுனர்  தொழுகை செய்த காட்சிகளை வீடியோவாக பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  வீடியோவில், ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தி, ஒரு இருக்கையில் அமர்ந்து தொழுகை செய்யும் காட்சியும், பயணிகள் நிலைமை தெரியாமல் வீடியோ எடுக்கும் காட்சியும் தெளிவாக காணப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது