undefined

அட கொடுமையே... வைரல் வீடியோ... பாவம் செய்த செல்போன்.... கும்பமேளாவில் நீராட வைத்த இளைஞர்!

 

இந்த விரல் நுனி விஞ்ஞான உலகத்தில் அதிகம் பாவம் செய்தது அவரவர்களுடைய செல்போனாக தான் இருக்கும் போல. எத்தனை சச்சரவுகள், வன்மம், சர்ச்சை என ஒவ்வொருவரின் அந்தரங்க உரையாடல்களையும் தனக்குள் மெளனமாக அசைப்போட்டுக் கொண்டிருக்கிறது செல்போன். இந்நிலையில், கும்பமேளாவில் செல்போனை நீராட வைத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ம்உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 14ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் 50கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில்  சிலர் தங்கள் செல்ல பிராணிகளுடன் வந்து புனித நீரில் நீராடி செல்கின்றனர். 

 

View this post on Instagram

A post shared by Kuwar Kaushal Sahu ji (@badassbaniya)

இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனை புனித நீராட்டினார்.  இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்த போன் பாவம் செய்துள்ளது, அதை கழுவ வேண்டும் என்று கூறி போனை அந்த இளைஞர் திரிவேணி சங்கமத்தில்  புனித நீரில் நீராட வைத்தார்.

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இந்த மொபைல் பாவங்களை போக்கிக் கொண்டது, இனி முழுமையாக பிரம்மலோகம் போய்விடும் போல என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?