undefined

ரசிகர்கள் அதிர்ச்சி...  விராட் கோஹ்லி  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!  

 
 


 
இந்திய அணி  ஜூன் 20-ம் தேதி  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்திருந்தார். ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவை அறிவித்த சில நாட்களிலேயே  இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோஹ்லியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

allowfullscreen

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோஹ்லி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ” 14 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் போட்டியில் விளையாட தொடங்கினேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளது என் 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது" என பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது