undefined

 “விசில் அடித்தால் முன்னேற  முடியாது ”… மாணவர்களுக்கு எம்.பி.,   அறிவுரை! 

 
 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி எம்பி தரணிவேந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசும்போது மாணவர்களின் எதிர்காலம் குறித்து அவர் முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

ஒரு மாணவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நல்ல கல்வி, ஒழுக்கம் மற்றும் பண்பு ஆகிய மூன்றும் மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக அடிப்படை கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறினார். இந்த திட்டங்களை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செய்யார் அரசு கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்திய அவர், அங்கு மாணவர்கள் விசில் அடித்து வரவேற்றதாக கூறினார். விசில் அடிக்காததால் தான் இன்று மேடையில் நிற்கிறோம் என்றும், விசில் அடித்த பலர் மேடைக்கு கீழே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் இவ்வாறு நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என அவர் அறிவுரை வழங்கினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!