undefined

இன்று முதல் தமிழகம் முழுவதும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்!

 

இன்று முதல் தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. மாவட்டங்களில் இதற்காக சிறப்பு  முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இன்று பிப்ரவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள 6 மாதம் முதல் 60 மாதம் (5 வயது) வரையுள்ள சுமார் 1,07,537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மி.லி அளவும், 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் இந்தத் திரவம் வழங்கப்படும்.

 குழந்தைகளுக்குக் கண் குருடு ஏற்படுவதைத் தடுக்கவும், மாலைக்கண் நோய் வராமல் பாதுகாக்கவும் இது அவசியம். குடல், சிறுநீர் பாதை, சுவாசப் பாதை மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க இது உதவுகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கு இந்த நுண்சத்து மிகவும் இன்றியமையாதது.

இந்த வைட்டமின் ஏ திரவத்தால் குழந்தைகளுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தத் திரவத்தைப் புகட்டி, ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!