undefined

தமிழகத்தின் புதிய ஆளுநர் வி.கே சிங்…? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 

 

 

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என் ரவி. இவருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 தீர்மானங்களும் செல்லாது. அந்த 10 தீர்மானங்களுக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

2021ம் ஆண்டு முதல் ஆளுநராக ரவி பணிபுரிந்து வரும் நிலையில் அவருடைய பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் புதிய ஆளுநராக விகே சிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?