நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைபை ... பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு அதிரடி புத்தாண்டு பரிசு!  

 

 

இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 'வாய்ஸ் ஓவர் வைபை' எனப்படும் புதிய சேவையை பி.எஸ்.என்.எல். தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட வசதி இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது.

இனி செல்போன் சிக்னல் மிகவும் பலவீனமாக இருக்கும் இடங்களிலும் தடையின்றி பேச முடியும். வீடுகள், அலுவலகங்களின் பேஸ்மென்ட் மற்றும் தொலைதூர கிராமப்புறங்களில் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். வைபை நெட்வொர்க் உதவியுடன் உயர்தரமான வாய்ஸ் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை மிகத் தெளிவாகப் பெற முடியும். இந்த புதிய வசதியால் வாடிக்கையாளர்கள் இனி சிக்னல் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

மிக முக்கியமாக இந்த ‘வைபை காலிங்’ சேவைக்கு பி.எஸ்.என்.எல். எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை. வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று 'வைபை காலிங்' என்ற விருப்பத்தை மட்டும் ஆன் செய்தால் போதுமானது. இந்த நவீன தொழில்நுட்ப வசதி குறித்த முழு விபரங்களையும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!