தொண்டர்கள் அதிர்ச்சி... வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!!
May 6, 2025, 09:00 IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில், கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை குறித்த தகவல் தெரியவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!