வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள்... விமான விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
குஜராத் மாநிலத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ரூபானியின் வீட்டின் முன்னே அவரது உறவினர்கள் கூடியுள்ளனர்.விஜய் ரூபானி உயிரிழந்த தகவலை பாஜக தலைவர் சி.ஆர். படேல் உறுதி செய்துள்ளார்.
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ம் தேதியில் பிறந்தவர். விஜய் ரூபானி, 1996 - 97 ராஜ்கோட் மேயராகவும், 2006 -12 வரையில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2016 - 2021 வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தவர்.
பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர். குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 ( புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!