undefined

வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்யலாம்?  முழு தகவல்கள்!

 
 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நவம்பர் தொடக்கத்தில் வீடு, வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட பிறகு டிசம்பர் 14-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் பலரின் பெயர்கள் இடம் பெறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விண்ணப்பங்களை ஜனவரி 18-ம் தேதி வரை சமர்ப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ நிரப்பி, உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அந்த உறுதிமொழியில், 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர் அல்லது பெற்றோர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம். அதேபோல் ECINET செயலி அல்லது voters.eci.gov.in இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதில் பெயர் இருந்தாலே வாக்களிக்கும் உரிமை கிடைக்கும் என்பதால், கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்  என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி  1. மத்திய-மாநில அரசு-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை.

2. 01.07.1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள்.

3. தகுதியான அதிகாரி வழங்கிய பிறப்பு சான்றிதழ்.

4. பாஸ்போர்ட்.

5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழங்கிய மெட்ரிகுலேஷன்-கல்வி சான்றிதழ்.

6. தகுதியான மாநில அதிகாரி வழங்கிய நிரந்தர வசிப்பிட சான்றிதழ்.

7. வன உரிமை சான்றிதழ்

8. தகுதியான அதிகாரி வழங்கிய சாதி சான்றிதழ்கள்.

9. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையில் உள்ள பகுதிகளில்.

10. மாநில அல்லது உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்ப பதிவேடு.

11. அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டு சான்றிதழ்.

12. ஆதார் அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு. உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே பெயர் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!