வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பத்துக்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) முடிவடைந்தது. இறுதி நாளில் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்ததால் பல இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்தது. நீக்கப்பட்டவர்களில் தகுதியானோர் மற்றும் புதிய வாக்காளர்கள் படிவம் 6 மூலம் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி 13,03,487 பேர் படிவம் 6-ஐ சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுக்கு எதிராக 35,646 பேர் படிவம் 7-ஐ அளித்துள்ளனர். இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பண்டிகை விடுமுறையை கருத்தில் கொண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!