undefined

 வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 10 நாள் கூடுதல் அவகாசம்!

 
 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரைச் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெயர் சேர்க்கும் பணிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம் ஜனவரி 30-இல் முடிவடைந்தது. தற்போது கூடுதலாக 10 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பெயர் நீக்கப்பட்ட விவரங்களை கிராம பஞ்சாயத்து, தாலுகா மற்றும் நகர்ப்புற அலுவலகங்களில் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பூத் ஏஜெண்டுகள் மூலமாகவும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் பணிக்குத் தேவையான அலுவலர்களை வழங்க மாநில அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், இதுவரை 16 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!