உஷார்... மேட்ரிமோனிலை நம்பாதீங்க... ரூபாய் 34,00,000 மோசடி... திருமணம் செய்து கொள்வதாக மருத்துவரை ஏமாற்றிய இளம்பெண்!

 

திருமணம் செய்து கொள்வதாக மருத்துவரை ஏமாற்றி, 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர். ஆன்லைன் மூலமாக அறிமுகமான இளம்பெண்ணிடம் திருமண ஆசையில் பணத்தைப் பறிகொடுத்து விட்டு, சைபர் க்ரைம் கண்டுபிடித்து தருவார்கள் என்று காத்திருக்கிறார் மருத்துவர்.

திருமணம் ஆனவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் என்றால், திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் ஆகவில்லையே என்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆன்லைன் மூலமாக இப்படியான கல்யாண கனவுகளுடன் காத்திருக்கும் இளம்பெண்களைக் குறி வைத்து, ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் இயங்கி வருவது போலவே, திருமண ஆசையில் காத்திருக்கும் ஆண்களுக்கு வலை வீசி, அவர்களிடம் பணம் பறிக்கும் பெண்கள் கும்பலும் இயங்கி வருகிறது. ஆன்லைன் ,சமூக வலைதளங்கள் மூலம் மோசடிகளும், நூதன ஏமாற்று வழிகளும் அதிகரித்து வருகின்றன.  சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி நம்ப வைத்து பணத்தை பறித்து செல்லும் டெக்னிக்குகள் பரவலாகி வருகின்றன. புதுச்சேரியில் வசித்து வருபவர்   பாலாஜி.  இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர். இவருடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் மேட்ரிமோனியல் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தால்  பாலாஜியின் மொபைல்போனுக்கு பெண்கள் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படு. அதில்  சோமஸ்ரீ நாயக் என்ற பெண்  இவருக்கு சமீபத்தில் அறிமுகமானார். தான் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு சிரியாவில் பணிபுரிந்து  வருவதாக அந்த பெண் தெரிவித்தார். பாலாஜி அவரது பேச்சில் மயங்கி  அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாகக் கூறி, பாலாஜியிடம் இருந்து ரூ34 லட்சம் அளவுக்கு தவணை முறையில் பணம் வாங்கினார்.  சரிவர பேசாததால் சந்தேகமடைந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.  பாலாஜி, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!