வாரன் பஃபெட் ஓய்வு… பெர்க்ஷியர் ஹேத்வேக்கு புதிய சிஇஓ!
‘பங்கு சந்தை பிதாமகன்’ என அழைக்கப்படும் வாரன் பஃபெட், பெர்க்ஷியர் ஹேத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகுகிறார். 96 வயதான அவர், வயது முதிர்வை காரணமாகக் கொண்டு ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தியவர் இன்று கடைசி நாளை நிறைவு செய்கிறார்.
நஷ்டத்தில் இருந்த ஜவுளி நிறுவனமாக இருந்த பெர்க்ஷியர் ஹேத்வேயை உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமாக மாற்றியவர் வாரன் பஃபெட். 1962-ல் ஒரு பங்கை 7.60 டாலருக்கு வாங்கிய அவர், காப்பீடு, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார். இன்று அந்த நிறுவனத்தின் பங்கு விலை 7.5 லட்சம் டாலரை தாண்டியுள்ளது.
இந்நிலையில், பெர்க்ஷியர் ஹேத்வே நிறுவனத்தின் புதிய சிஇஓவாக கிரேக் ஏபெல் நாளை முதல் பொறுப்பேற்க உள்ளார். தற்போது துணை தலைவராக உள்ள அவர், பஃபெட்டின் நம்பிக்கைக்குரியவர். நிர்வாக பொறுப்பில் இருந்து விலகினாலும், வாரன் பஃபெட் செயல் சாரா தலைவராக தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!