'யூடியூப்' பார்த்து ஆபரேஷன்... பெண் பரிதாபப் பலி!
உத்தர பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்தச் செயலால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மிஸ்ரா. இவர் ஒரு போலி மருத்துவர். உள்ளூரில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.
முனீஷ்ரா என்ற பெண்மணி சிறுநீரகக் கல் பிரச்சினைக்காக இவரிடம் சிகிச்சை பெற வந்தார். அந்தப் பெண்ணிடம் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்க வேண்டும் என்று பிரகாஷ் மிஸ்ரா கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்காக முதலில் அவர் ரூ. 20,000 முன்பணமாகப் பெற்றார். பிறகு தன் உறவினர் ஒருவருடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்தார்.
அவருக்குச் சரியாக மருத்துவம் தெரியாது. எனவே, யூடியூப் தளத்தில் இருந்த ஒரு அறுவை சிகிச்சை வீடியோவைப் பார்த்துள்ளார். அதை வைத்தே அறுவை சிகிச்சை செய்ய முயன்றார். அப்போது பிரகாஷ் மிஸ்ரா மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது அவர் ஆழமாக வெட்டியுள்ளார். இதனால் முனீஷ்ராவின் பல நரம்புகள் துண்டாகின. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். முனீஷ்ராவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே போலி மருத்துவர் பிரகாஷ் மிஸ்ரா தப்பியோடிவிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!