நாங்களும் களத்துல இருக்கோம்...” இன்று சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது காங்கிரஸ்  கட்சி!

 

ஊர் கூடி இழுத்தா தான் தேர் என்பது போல கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்தால் தான் வெற்றி என்று புலம்புகிறார்கள் திமுக தொண்டர்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கடைசி நிமிடம் வரையில் கூட்டணியில் பிரச்சனைகளை ஏற்படுத்திய காங்கிரஸ் இந்த முறை எப்படி ஜெயிக்குதுன்னு பார்க்கலாம் என்கிற குரல்களும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பு போலவே கடைசியாக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது காங்கிரஸ் கட்சி.

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிக்கையை வெளியிட முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொள்கிறார்.  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான கார்த்தி ப. சிதம்பரம் தொடக்கவுரை ஆற்றும் இந்நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்த முக்கிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. முன்னதாக, மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆனந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளமே கலந்துகொள்ள உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் எனப் பலமான போட்டிகள் நிலவும் சூழலில், காங்கிரஸின் இந்தத் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் இதில் இடம்பெறும் எனத் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!